உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி 53 லட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய மனுவொன்றை தாக்கல் செய்ய கூட்டு எதிர்க் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கையெழுத்து வேட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மஹிந்த சார்பு பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
எல்லைநிர்ணயம் செய்யப்பட்ட தொகுதிகள் 4976 இற்கும் சென்று இந்த கையெழுத்துக்களைச் சேகரிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.