யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிநபர் ஒருவரின் அத்தியாவசிய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதற்கு, குறைந்த பட்சம் 13 ஆயிரத்து , 477 ரூபாய் தேவைப்படுவதாக புள்ளிவிபரவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையில் ஒரு தனிநபர் தனது அத்தியாவசிய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதற்கு அவருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 13 ஆயிரத்து 810 ரூபா தேவைப்படுகிறது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்கு 14,894 ரூபா,
கம்பஹா மாவட்டத்திற்கு 14,818 ரூபா
களுத்துறை மாவட்டத்திற்கு 14,496 ரூபா,
கண்டி மாவட்டத்திற்கு 14,018 ரூபா
மாத்தளை மாவட்டத்திற்கு 13,999 ரூபா,
நுவரெலியா மாவட்டத்திற்கு 14,552 ரூபா
காலி மாவட்டத்திற்கு 14,031 ரூபா,
மாத்தளை மாவட்டத்திற்கு 13,487 ரூபா
அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 13,417 ரூபா,
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 13,477 ரூபா
மன்னார் மாவட்டத்திற்கு 14,145 ரூபா,
வவுனியா மாவட்டத்திற்கு 13,796 ரூபா
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13,713 ரூபா,
கிளிநொச்சி மாவட்டத்திற்கு 13,342 ரூபா
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 13,885 ரூபா,
அம்பாறை மாவட்டத்திற்கு 13,920 ரூபா
திருகோணமலை மாவட்டத்திற்கு 13,455 ரூபா,
புத்தளம் மாவட்டத்திற்கு 14,097 ரூபா
அனுராதபுரம் மாவட்டத்திற்கு 13,477 ரூபா,
பொலன்னறுவை மாவட்டத்திற்கு 13,513 ரூபா
பதுளை மாவட்டத்திற்கு 13,912 ரூபா,
மொனராகலை மாவட்டத்திற்கு 13,204 ரூபா
இரத்தினபுரி மாவட்டத்திற்கு 13,871 ரூபா,
கேகாலை மாவட்டத்திற்கு 14,440 ரூபா என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.