பரவிப்பாஞ்சானில் போராட்டத்தில் ஆனந்தசங்கரி….(காணொளி)

332 0

கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி இன்று சந்தித்தார்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் 3ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களின் பூர்வீக காணியை மீட்கும் போராட்டம் இன்று 3ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இரவு பகலாக தொடரும் குறித்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் வருகை தந்து அவர்களை சந்தித்து வருகின்றனர்.

இதற்கமைய இன்று காலை தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மக்களை சந்தித்தார்.