வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரக் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும்(காணொளி)

318 0

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரக் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேராட்டம் நாடத்தப்பட்டது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட போராட்டத்தில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

குறித்த பேராட்டத்தில் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் காணிகள், புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள், கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் காணிகள், வலி வடக்கு மக்களின் காணிகள், என்பன விடுவிக்கப்பட வேண்டும் என்ற மக்களின் போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் நேற்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.