யாழ்ப்பாணம் நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிஇடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ம.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியானது விருந்தினர்கள் நல்லூர் ஆலயத்திலிருந்து அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பமானது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி ஸ்ரீதேவி அசோகன், மாலபே நிறுவனத்தின் பொறியியல் சேவை பணிப்பாளர் மு.ந.அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு விருந்தினர்களால் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.