பிரேசில் காடுகளில் 64 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வகை சுருக்கு பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகில் வாழும் அரிய வகை பாம்புகளில் ஒன்று தொண்டை சுருக்கு பாம்பு. இந்த அரிய வகை பாம்புகள் பிரேசில் காடுகளில் யார் கண்களுக்கு படாமல் உயிர்வாழ்ந்து வந்தது.
இந்நிலையில், அரிய வகை தொண்டை சுருக்கு பாம்பு ஒன்று 64 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரேசில் நாட்டின் ரிபெய்ரா பகுதியை சேர்ந்த மக்கள் இந்த பாம்பினை பிடித்து உள்ளூர் ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த பாம்பு ஒரு பெண் இனம். பாம்பின் நீளம் 1.7 மீட்டர். எடை 1.5 கிலோகிராம்.
முன்னதாக 1953-ம் ஆண்டு இந்த வகை பாம்புகள் கண்களுக்கு தென் பட்டது. இத்தனை ஆண்டுகள் இந்த பாம்புகள் காடுகளில் புலப்படாமலேயே இருந்து வந்தது.
பிடிக்கப்பட்ட அந்த பாம்பு மீண்டும் காடுகளில் விடப்பட்டுள்ளது. அந்த பாம்பின் உடலில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் காடுகளில் அந்த பாம்பு எப்படி வசிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்காணிக்க உள்ளனர்.