நீண்ட தூர ரெயில்களுக்கான முன்பதிவு டிக்கெட் வைத்திருப்போர் மின்சார ரெயில்களில் அதே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என, தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
வெளி மாநிலம், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் தங்களது முன்பதிவு டிக்கெட்டில் மின்சார ரெயில்களில் பயணம் செய்தால் டிக்கெட் பரிசோதகர்கள் அதற்குத் தனியாக கட்டணம் வசூலிப்பர்.முன்பதிவு செய்த டிக்கெட்டில் தானே மின்சார ரெயில்களில் பயணம் செய்கிறோம். அதற்கும் அபராதம் வசூலிப்பது சரியா? என பொதுமக்கள் நீண்டநாளாக கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், முன்பதிவு டிக்கெட் வைத்திருப்போர் மின்சார ரெயில்களில் அதே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ” நீண்ட தூர ரெயில்களுக்கான முன்பதிவு டிக்கெட் வைத்திருப்போர் அதே டிக்கெட்டில் எழும்பூர்-தாம்பரம், சென்ட்ரல்-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில்களில் பயணிக்கலாம்” என அறிவித்துள்ளது.