பாஸ்மதி (Basmathi) அரிசி தவிர்ந்த ஏனைய அரிசிகளை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பாஸ்மதி அரிசியை மாத்திரம் இறக்குமதி செய்ய முடியும் எனவும் ஏனைய அரிசி வகைகளின் இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நிதி, பொருளாதார மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரிசி இறக்குமதியை உரிம முறைக்கு உட்படுத்தி இந்தத் தடையை விதித்துள்ளதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.