கோட்டாவின் பிரதிநிதிக்கு எதிரான வழக்கில் யஸ்மின் சூகா வெற்றி

183 0

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யஸ்மின் சூகா, தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுவுக்குச் சார்புடையவர் என குற்றஞ்சாட்டிய கோட்டாபய ராஜபக்சவின் இங்கிலாந்து பிரதிநிதியாக செயற்பட்ட சட்டத்தரணி ஜெயராஜ் பலிஹவடன மீதான குற்றச்சாட்டின் பிரதிகளை ஜெனீவாவில் உள்ள 47 தூதரகங்களுக்கும் அனுப்பியிருந்ததையடுத்து, அறிக்கைக்கு எதிராக யஸ்மின் சூகா வழக்குத் தாக்கல் செய்திருந்தார். தனது அறிக்கை தொடர்பில் சட்டத்தரணி ஜெயராஜ் பலிஹவடன நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோரிய நிலையில் மன்னிப்புக் கோரலை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையத்தில் வெளியிடவும் இங்கிலாந்து நீதிமன்றில் இணக்கம் வெளியிட்டுள்ளார்.