சர்வதேச நாணயநிதியம் இலங்கை குறித்து கவனம் செலுத்தாது

120 0

இலங்கைக்கான 2.9 மில்லியன் டொலர் நிதியுதவிக்கு சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபை  இந்த வருட இறுதிக்குள் அனுமதி வழங்காது என விடயமறிந்த வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு  தெரிவித்துள்ளன.

தசாப்தகாலங்களில் இல்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்காக இலங்கை ஜூன்மாதம் சர்வதேநாணயநிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை செய்துகொண்டது.

இந்த உடன்படிக்கைகக்கு சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரமளிக்கவேண்டும்,இலங்கை அரசாங்கம் முன்னர் வாக்குறுதியளித்த விடயங்களை நிறைவேற்றவேண்டும்.

வருட இறுதியில் சர்வதேசநாணயநிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரமளிக்கும் என செப்டம்பரில் இலங்கை நம்பிக்கை வெளியிட்டிருந்தது.

எனினும் இந்த வேண்டுகோள் ஜனவரி வரை நீடிக்கப்படலாம் என நிதியமைச்சர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரமளிப்பதற்கு முன்னர் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளின் உத்தரவாதம் அவசியம்.

இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய மூன்று நாடுகளான சீனா இலங்கை இந்தியா ஆகியவற்றுடன் கூட்டுப்பேச்சுவார்த்தைகளிற்கான முக்கியத்துவத்தை சர்வதேச நாணயநிதியம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் வருடாந்த கலண்டரில் நாடுகளின் பொருளாதார நிலைமை குறித்து டிசம்பர் 22 ம் திகதி வரை விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,எனினும் இலங்கை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இது குறித்து கேள்வி எழுப்பியவேளை சர்வதேச நாணயநிதியத்;தின் அங்கீகாரத்தை பெறுவது குறித்து 100 வீதம் கவனம் செலுத்துவதாக இலங்கையின் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எங்களின் இரு தரப்பு கடன்வழங்குநர்களின் நிதி உத்தரவாதங்களை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம் என நிதியமைச்சு மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை ரொய்ட்டருக்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் கடிதத்தில் நிறைவேற்று சபை எப்போது அங்கீகாரம் வழங்கும் என்பதை உறுதி செய்ய முடியாது – பேச்சுவார்த்தைகள் நீண்டகாலம் பிடிக்க கூடியவை என சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.