உலகின் சக்திவாய்ந்த நாடாக உருவாகிறது இந்தியா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கருத்து

128 0

உலகின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவாகி வருகிறது. அதனால் இந்தியாவை ஐ.நா. கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக கணக்கில் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய லாவ்ரோவ், “இன்றைய பல்முனை உலகில் இந்தியா நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சக்தி. பொருளாதார வளர்ச்சி ரீதியாக விரைவில் இந்தியா ஒரு முக்கியமான முன்னணி நாடாக உருவாகலாம். ஏன் தலைவராகக் கூட ஆகலாம். பல்வேறு பிரச்சினைகளையும் கையாள்வதில் இந்தியாவிற்கு தூதரக அனுபவம் அதிகம். இந்தியா உலக அரங்கில் தனக்கென ஓர் ஒப்பற்ற இடத்தைக் கொண்டுள்ளது. ஐ.நா.வில் ஈடுபாட்டுடன் இந்தியா பணியாற்றி வருகிறது. தெற்காசியாவில் பல்வேறு ஒருங்கிணைக்கும் கட்டமைப்பு பணியையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து சிறப்புடன் செய்து வருகிறது. வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் பெரிய அளவில் அதிகரிக்கலாம். அதுவே அதற்கு பலமாகலாம். இந்தியாவை ஐ.நா. கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக கணக்கில் கொள்ள வேண்டும்” என்றார்.