பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேருக்கும் விளக்கமறியல்

137 0

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான  சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோரைத்  தாக்கி வீட்டுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பல்கலைக்கழக மாணவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிவான் ஸ்ரீநித் வீரசேகர இன்று (13) உத்தரவிட்டார். 

இன்று அவர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக கூடியமை,  தாக்குதல்,  காயப்படுத்துதல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.