துருக்கியில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் துருக்கியின் தெற்கு மாகாணமான கும்லூகா பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரே இரவில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளத்தின் வேகத்தில் சில பாகங்களும் இடிந்து விழுந்தன. மழையின் வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கார்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட போது கார்கள் ஒன்றோடொன்று மோதி உருக்குலைந்து காணப்பட்டன. வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மேலும் அங்கு பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன.