அரச துறைகளுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 32,000 பேருக்கு நிரந்தர பணி

126 0

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பல துறைகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்ட 32,000 பேரும் அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்க நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர்கள் தற்பொழுது பல்வேறு அரச நிறுவனங்களில் இணைக்கப்பட்டு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்ட ஒரு தரப்பினரை வெளிநாட்டுப்பணிகளில் ஈடுபடுத்துவதற்கான அனைத்துத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு அவர்கள் வெளிநாடு செல்வதற்குத் தேவையான தொழில் திறன் பரீட்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.