ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் மாணவிபலி

182 0

ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பாடசாலை மாணவியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் தென்பகுதியில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 14 மற்றும் 13 வயது மாணவிகள் மீது நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இல்லர்கிர்ச்பேர்க் என்ற கிராமத்தில் உள்ள அகதிகளிற்கான நிலையமொன்றிலிருந்து  வெளியே வந்த நபர் ஒருவர் இந்தகத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது 14 வயது மாணவி உயிரிழந்துள்ளார்.

எரித்திரியாவை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே இந்த கத்திக்குத்தில் ஈடுபட்டார் என பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

அருகில் உள்ள கட்டிடமொன்றை சோதனையிட்டவேளை கத்தியுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார் இந்த கத்தியை அவர் தாக்குதலிற்கு பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிஸார் வேறு இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸார் இந்த சம்பவத்தை பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் அல்லது புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு எதிராக பதற்றத்தை அதிகரிக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல விடயங்கள் தெளிவற்றவையாக காணப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.