மாங்குளம் கொக்காவில் காட்டுப் பிரதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் யுத்த தாங்கியில் மோதுண்டதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சிப்பாய் கொக்காவில் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுவரும் நிலையில் சில நாட்களாக கொக்காவில் வனப் பகுதியில் இருந்த தாங்கியை பயன்படுத்தி பயிற்சியில் நேற்று (05) ஈடுபட்டுள்ளார்.
அவ்வாறான பயிற்சியின்போதே யுத்த தாங்கியில் இவர் சிக்கியுள்ளார். இதன்போது பலத்த காயமடைந்த சிப்பாய் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.