20,000 ரூபாவை இலஞ்சம் பெற முயற்சித்தார் என்ற சந்தேகத்தில் ஹொரவபொத்தானை உள்ளூராட்சி சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் இன்று (06) இலஞ்ச ஊழல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரவபொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகரின் மனைவிக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றின் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு உரிமம் வழங்குவதற்காக சந்தேகத்துக்குரிய தொழில்நுட்ப உத்தியோகத்தர் இருபதாயிரம் ரூபாவை இலஞ்சமாக கோரியதாகவும் அதன்படி அந்த தொகையை பெற சென்றபோதே கைது செய்யப்பட்டதாகவும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.