இந்தியாவிடமிருந்து இலங்கை பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார்.
1991 இல் இந்தியா இதேபோன்றதொரு நிலைமையை எதிர்கொண்டது இரண்டு வார இறக்குமதிக்கான நிலை மாத்திரம் காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் ஆனால் பின்னர் இந்தியாவால் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவிடமிருந்து இலங்கை பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா 1991ம் ஆண்டு சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடியது உக்ரைன் விவகாரத்;தை போல இந்தியாவும் அவ்வேளை வளைகுடா யுத்தத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் 1991 இல் இந்தியாவின் உதவியை நாடினோம்,இதன் பின்னர் இந்தியாவின் ரிசேர்வ் வங்கியும் இந்திய மத்திய அரசாங்கமும் உள்நாட்டு சீர்திருத்தங்களை முன்னெடுக்க ஆரம்பித்தன இந்தியா வர்த்தக தாராளமயப்படுத்துதல்,வரி சீர்திருத்தம்,போன்றவற்றை முன்னெடுத்தது, இந்தியாவின் இன்றைய மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 டிரில்லியன் டொலர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான இந்திய அரசாங்கத்தின் தந்திரோபாயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் வர்த்தக துறை எரிபொருள் சுற்றுலாத்துறை உற்பத்தி போன்றவற்றிலேயே இந்தியா அதிக கவனம் செலுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதலீட்டு திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளன,அதானி குழுமத்தின் மேற்கு கொள்கலன் முனையமே அது மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி துறை உட்பட பல துறைகளில் இந்தியா முதலீடு செய்யவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.