மாவீரர் நாள் வணக்க நிகழ்வு 2022 – முன்சன்

875 0

தமிழீழ விடுதலைத் தீயில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு முன்சன் நகரில் 04.12.2022 ஞாயிற்றுக்கிழமை எழுச்சியுடன் நடைபெற்றது. 400க்கு மேற்பட்ட தமிழீழ உறவுகள் கலந்துகொண்ட இவ்வணக்க நிகழ்வு, 15:00 மணிக்குத் தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கி, தமிழீழத் தேசிய மலர் கொண்டு, மலர் வணக்கம் மற்றும் சுடர் வணக்கம் செய்து மாவீரர்களை வணங்கினார்கள்.

தொடர்ந்து கல்லறையில் துயில்கொள்ளும் காவிய நாயகர்களின் தியாகங்களைப் போற்றிக் கவிதைகள், உரைகள், பாடல்களுடன் எழுச்சி நடனங்களும் இடம்பெற்றதுடன், மாவீரர் நினைவாக நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றது. இறுதியில் 19:45 மணிக்குத் தேசியக்கொடி இறக்கியதுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கைப் பாடலுடன் முன்சன் மாவீரர் நாள் வணக்க நிகழ்வு 2022 நிறைவுற்றது.