கிளிநொச்சியில் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யக்கோரி வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (06) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் சில மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருவதன் காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தனியார் வைத்திய சாலைகளிலும் அதிகூடிய விலைகளிலும் மருந்துகளை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரி குறித்த போராட்டம் வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.
குறித்த போராட்டத்தில் பெருமளவு பெண்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.