அத்தியாவசிய மருந்துவகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு உடனடியாக கிடைக்க வழிவகை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் அத்தியாவசிய மருந்துவகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்கவேண்டும், மருந்துகளை உடனடியாக பெற வழிவகை செய்ய வேண்டும், பெண்களின் சுகாதார உரிமை உறுதிப்படுத்த வேண்டும்,
‘
சுகாதார உரிமை எமது உரிமை,நமது வாழ்க்கை எமது உரிமை, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டம் இடம்பெற்றது.போராட்டத்தின் முடிவில் ஐனாதிபதிக்கான மகஜர் வாசிக்கப்பட்டு உரியதரப்பிற்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.