மன்னார் மாவட்டத்தில் 2017ம் ஆண்டின் முதல் 50 நாட்களில் மட்டும் 192பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்தே கானப்படுகின்றது. இதன் பிரகாரம் இந்த ஆண்டின் இன்றுவரையான நிலவரங்களின் பிரகாரம் மாவட்டத்தில் மொத்தமாக 192 பேர் இனம் கானப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்கானப்பட்டவர்களில் 145 பேர் ஜனவரி மாத்த்திலும் 47 பேர் பெப்ரவரி மாதத்திலும் இனம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயாளர்கள் இனம் காணப்படும் பிரதேசங்களில் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் உடனடியாகவே முன்னெடுக்கப்படுகின்றது. இதேநேரம் குறித்த டெங்கு நோய்த் தாக்கமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிகரித்தே கானப்படுகின்றது. 2016ம் ஆண்டின் 12 மாதங்களிலும் மொத்தமாக 237 பேர் மட்டுமே மன்னாரில் இனம் கானப்பட்டிருந்தபோதிலும் இந்த ஆண்டு முதல் இரு மாதங்களின் இன்றைய நிலவரத்தின்படி 192 பேர் இனம் கானப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.