கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோப்பளை மற்றும் தம்பகாமம் ஆகிய பகுதிகளில் இரண்டு இந்து ஆலயங்கள் திங்கட்கிழமை (டிச. 05) இரவு உடைக்கப்பட்டு பெருமளவான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோப்பளை பகுதியில் அமைந்துள்ள வைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு அங்குள்ள விக்கிரகங்களின் ஐம்பொன் தகடுகள் விக்கிரகங்கள் களவாடப்பட்டுள்ளன.
அதேபோல தம்பகாமம் பகுதியில உள்ள நெல்லியாய் அம்மன் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்து பெருமளவான பொருட்கள் களவாடப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு குறித்த இரு ஆலயங்களும் நேற்றிரவு உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன
இந்த சம்பவங்கள் தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பேரில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.