முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவமனையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நீக்க கோரி மாவட்ட செயலகத்திற்க முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்கள் உணவுக்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
இந்த வகையில் மக்களின் வாழ்க்கை செலவு மேலும் மேலும் அதிகரித்து செல்வதுடன் நாட்டில் மருத்துவதுறையிலும் இது பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறுபட்ட முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் மக்களுக்கான இலவச மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவத்தினை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இலங்கையில் வறுமைக்குட்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டமும் காணப்படுகின்றது. கிராம புறங்களில் வறுமைக்குட்பட்ட குடும்பங்கள் அதிகளவில் காணப்படும் மாவட்டமாகவும் முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட மருத்துவமனையில் மருந்துக்கான தட்டுப்பாடு மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு என்பனவற்றை நிவர்தி செய்ய கோரி வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கான மனு வாசிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டசெயகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களிடம் சென்று மனுஒன்றினை கையளித்துள்ளார்கள்.