உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனவே, உரிய நேரத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், உள்ளூராட்சி தேர்தலை பிற்போடும் திட்டம் எதுவும் இல்லை. திட்டமிட்டவாறு தேர்தல் நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
தங்களுக்குதான் மக்கள் ஆதரவு உள்ளது என மார்தட்டிக்கொள்ளும் எதிரணிகளுக்கும் மக்கள் யார் பக்கம் என்பதை தெளிவாக பார்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, தேர்தலுக்கு தயாராகுமாறு கட்சி தலைவர்களுக்கு சவால் விடுப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் தேர்தலைகோரவில்லை. அரசியல் கட்சிகள்தான் துடிக்கின்றன.
நாடு பற்றி எரியும்போது, அதனை அணைப்பதற்கு ஒத்துழைக்காத தரப்புகளுக்கு தேர்தல் ஊடாக மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.