கலைப்பீட முதலாம் ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்:
கலைப் பீடத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 2015/2016 ஆம் கல்வி ஆண்டுக்குரிய மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 01.03.2017 புதன்கிழமை காலை ஆரம்பமாகும் என்று கலைப்பீடாதிபதி கலாநிதி கருணாகரன் சுதாகர் தெரிவித்துள்ளார்.
இதன்படி கலைப்பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 01.03.2017 புதன்கிழமை காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெறும் அறிமுக ஆரம்ப நிகழ்வின்முதலாவதுஅமர்வில் கலந்து கொள்ளுமாறு கலைப்பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை விசேட பாடங்களின் அடிப்படையில் கலைப்பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 01.03.2017 புதன்கிழமை காலை பதினொரு மணிக்கு நடைபெறும் அறிமுக ஆரம்ப நிகழ்வின் இரண்டாவது அமர்வில் கலந்து கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்படி அறிமுக நிகழ்வு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும்.விடுதி வசதிகோரி விண்ணப்பித்து விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் அறிமுக நிகழ்வுக்கு முன்தினம் 28.02.2017 தொடக்கம் விடுதிகளுக்கு வருகைதரமுடியும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.