மொரட்டுவ, லுனாவ, ரதுகுருச அடுக்குமாடி குடியிருப்பின் 4 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (04) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரட்டுவெல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.