2017 ம் ஆண்டு 5,78,910 கிலோ இறால் பிடிக்கப்பட்டுள்ளது

271 0

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ் குடாநாட்டு கடற்பரப்புகளில் மொத்தமாக  5,78,910 கிலோகிராம் இறால் பிடிக்கப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டு கடற்பரப்புக்களில் இந்தவருடம் ஜனவரி மாதம் அதிகளவான இறால் பிடிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள புள்ளிவிபரத்தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக யாழ் குடாநாட்டில்தாளையடி,பருத்தித்துறைமேற்கு,கிழக்கு, காங்கேசன்துறை மேற்கு,கிழக்கு சண்டிலிப்பாய், சுழிபுரம், ஊர்காவற்துறை, நெடுந்தீவு, வேலணை,யாழ்ப்பாணம் கிழக்கு, மேற்கு, சாவகச்சேரி, ஆகிய  14 மீன்பிடி பிரதேசங்களாக காணப்படுகின்றன.
இவற்றில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக சிவப்பு இறால் காணப்படுகின்றது. இதில் காங்கேசன்துறை மேற்கு,கிழக்கு ஆகிய கடற்பரப்புகளில் இறால் பிடிக்கப்படவில்லை என புள்ளிவிபரத்தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருங்களுடன் ஒப்பிடுகையில் இறால் பிடிப்பின் மொத்த எண்ணிக்கையில் ஜனவரி மாதம் பிடிக்கப்பட்ட இறால்களின் அளவு அதிகமாக காணப்படுகின்றது.
மேலும் யாழ் குடாநாட்டு சந்தைகளில் சிவப்பு இறால் ஒரு கிலோ 600 ரூபா தொடக்கம் 700 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.இதில் சுத்திகரிக்கப்பட்ட நிறமூட்டப்பட்ட இறால் வகை 800 ரூபா தொடக்கம் 900 ரூபா வரை எற்றுமதி செய்யப்படுகின்றது.