எதிர்வரும் சிவன் இராத்திரியை முன்னிட்டு வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் திருக்கேதீஸ்வரம் செல்லும் பிரதான மூன்று வீதிகளில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு வீதிகளை, திருக்கேதீஸ்வரம் வருகின்ற பக்தர்களுக்கு சிரமங்களை குறைத்து போக்குவரத்தை இலகுவாக்கும் முகமாக மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளருக்கு குறித்த வீதிகள் இரண்டையும் புனரமைக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.
அதற்கமைவாக வீதி பராமரிப்பின் கீழ் 01 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக மூடப்பட்டிருந்த மனித புதைகுழி காணப்பட்ட பகுதியாலான வீதியும், பிரதான வீதியுமாக இரண்டு வீதிகளும் புனரமைப்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அந்தவகையில் குறித்த புனரமைப்புப்பணிகளை அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் பார்வையிட்டார்.