பகிடிவதை: விளக்கமறியலில் உள்ள 15 மாணவர்களுக்கும் வகுப்புத் தடை!

240 0

பகிடிவதையுடன் தொடர்புடை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட இரண்டாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

விவசாய பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலருக்கு பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான 15 மாணவர்களும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை இந்த வகுப்பு தடை அமுலில் இருக்கும் என உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.