கிளிநொச்சி பூனகரி இலவங்குடா பகுதியில் வாழ்வாதாரத் தொழில்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைகளை அகற்றக்கோரி 66 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை ஜே. வி. பி. கட்சியினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட கிராஞ்சி இலவம்குடா கடற் பரப்பில் தங்களது வாழ்வாதாரத் தொழில்கள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைகளை அகற்றக் கோரி பிரதேசத்தை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் சிறுகடல் தொழிலாளர்கள் 66 ஆவது நாளாகவும் இன்று (04) முன்னெடுக்க பட்ட வருகின்ற போராட்டத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை சந்தித்து ஜேவிபி கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் சென்று அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.