சிறீலங்காவின் வறட்சிக்கு இந்தியா உடனடி நிவாரண உதவி!

270 0

வறட்சியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறீலங்காவுக்கு 100 மெட்ரிக் தொன் அரிசியும் 8 நீர்த்தாங்கிகளையும் உடனடி நிவாரணமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

சிறீலங்காவுக்குப் பயணம் செய்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர் நேற்றைய தினம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இப்பேச்சின்போது இருதரப்பு முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச்சு நடாத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சிறீலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவையும் இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார்.

jaishankar-harsha