வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் பகுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி வெள்ளிக்கிழமை (02) சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொரலெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி இவ்வாறு சிறுவன் உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த சிறுவன் 14 வயதுடைய கலகெதர, சந்தலங்காவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் அவர் தரம் 10 கல்வி பயிலும் மாணவன் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவன் பன்னல மாகந்துர பிரதேசத்தில் 80 மாணவர்கள் கலந்து கொண்டு தனியார் வகுப்பொன்றின் இரண்டு மாணவர்கள் அடங்கிய குழுவொன்று விசேட சுற்றுலாப்பயணம் ஒன்றை மேற்கொண்டு குறித்த ஹோட்டலுக்கு சென்றுள்ளதாகவும் மேலும் அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.