ஸ்பிரிங்வெலி பகுதியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இபுல்கொட தும்பிலியாவ பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி சுமார் 1,000 அடி பள்ளத்தில் வீழ்ந்து கொண்டிருந்தபோது சாரதியின் சாதுரியத்தால் அது தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த பஸ்ஸில் பயணித்த 40 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பஸ் சாரதியின் சாதுரியத்தால் பாரிய உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் பல வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.