போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விலங்குகளை போல் செயற்பட்டார்கள். மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாதவர்கள் போராட்டத்தின் பின்னணியில் உள்ளார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டப்ள்யூ,டி.வீரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு,வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு,சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க திணைக்களத்தின் மோசடி தொடர்பில் குறிப்பிடப்படுகிறது.திணைக்களத்தின் தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க சுற்றாடல் துறை அமைச்சு முன்னெடுக்க வேண்டும்.அரச அதிகாரிகளின் மோசடிக்கு அரசியல்வாதிகள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது.
யானை மனித மோதலை தடுக்க முறையான திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும்.யானை தடுப்பு வேலி,கால்வாய் அமைத்தல் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்காது.
யானை தாக்குதலால் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்,2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யானை மனித மோதல் தடுக்க விசேட பரிந்துரைகள் முன்வைக்கப்படவில்லை.
வனஜீவராசிகள் அதிகாரிகள் சிறந்த முறையில் சேவையாற்றுவதற்கு பல தடைகள் காணப்படுகிறது.பௌதீக வளங்கள் மற்றும் மனித வளங்களில் பாரிய குறைபாடு காணப்படுகிறது.ஆகவே வனஜீவராசிகள் சேவையில் ஈடுபடும் அதிகாரிகள்,சேவையாளர்களின் நலன் குறித்து விசேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு தீராத பிரச்சினையாக உள்ளது.ஒன்று பயிர்களை உண்டு மனிதர்கள் வாழ வேண்டும் அல்லது பயிர்களை விலங்குகள் தின்று வாழ வேண்டும் என்பதை யதார்த்த ரீதியாக தீர்மானிக்க வேண்டும்.பயிர்செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உயிரினங்களை கட்டுப்படுத்த ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்தின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அபிவிருத்தி செயற்படுத்தப்படுகின்றன.இந்த அபிவிருத்தி தி;ட்டங்களுக்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டததில் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்ட போதும் முறையற்ற திட்டங்கள் அமுல்படத்தபக்படுத்தப்பட்டுள்ளன,ஆகவே இந்த திட்டங்களை இடைநிறுத்த சுற்றாடல் துறை அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுப்படுபவர்களை அடித்து விரட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சரன்பொன்சேகா குறிப்பிட்டார்.காலி முகத்திடலுக்கு வரும் விலங்குகளை அடித்து கூண்டில் அடைக்க வேண்டும்.போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள் விலங்குகளை போல் செயற்பட்டார்கள். மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாதவர்கள் தான் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டை இல்லாதொழிக்கிறார்கள் என்றார்.