சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் : மு.க ஸ்டாலின்

383 0

சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா தமிழகத்தை ஆட்சி செய்தது வெட்க கேடானது என்று தெரிவித்தார். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அவரது வழிகாட்டுதலில் ஓ.பி.எஸ். ஆட்சி நடத்தினார்.

தற்போது சிறையில் உள்ள சசிகலா வழிகாட்டுதலில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார். ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி அரசுகள் இரண்டுமே பினாமி ஆட்சிதான் என்று  மதுராந்தகத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சி மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற விழாவில் மாற்றுக்கட்சியினர் 10,000 பேர் திமுகவில் இணைந்தனர். மாற்றுக்கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.