ஒதியமலை படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல்

84 0

முல்லைத்தீவு – ஒதியமலைப் பகுதியில் கடந்த 1984.12.02 அன்று படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 02.12.2022 இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் ஒதியமலை சனசமூக நிலைய வளாகத்திலுள்ள நினைவிடத்தில் இடம்பெற்ற  நிகழ்வில் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அதனைத் தொடர்ந்து  உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக் கற்களுக்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலிகளில் ஈடுபட்டனர். அதனையடுத்து அஞ்சலிக்கூட்டமொன்றும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுபனபினர்களான சின்னராசா லோகேஸ்வரன், கனகையா தவராசா, புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ஜோன்சன் ஆகியோருடன் படுகொலை செய்யப்பட்டவர்களுடைய உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் படுகொலைசெய்ப்பட்டவர்களின் நினைவாக உறவினர்களுக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.