படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு

280 0

களுத்துறை – கடுகுருந்த கடற்பகுதியில் நேற்று முன்தினம் (19) படகொன்று கவிழ்ந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இந்த சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா பணமும், காயமடைந்தவர்களுக்கு 20,000 ரூபா பணமும் இழப்பீடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை இன்று பாராளுமன்றத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.