நான்கு நூல்கள் வெளியீடு

359 0

நான்காவது பரிமாணம் வெளியீடாக க.நவம், திருமதி ஷியாமளா நவம் ஆகியோர் எழுதிய பரதேசம் போனவர்கள், படைப்புகளும் பார்வைகளும், இயற்கையுடன் வாழுதல், தடங்களைக் கடந்து செல்லும் காலநதி ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 3.00 மணிக்கு பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

ந. ஆதவன் வரவேற்புரையாற்றினார். கவிஞர் த. ஜெயசீலன், கவிஞர்  வதிரி. சி.ரவீந்திரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் வே.சிவயோகம் ஆகியோர் வாழ்த்துரையையும், ஜீவநதி ஆசிரியர் க.  பரணீதரன் வெளியீட்டுரையையும் நிகழ்த்தினர்.

விரிவுரையாளர்.ஈ.குமரன், கவிஞர்.எஸ்.கருணாகரன், டாக்டர்.எம்.கே.முருகானந்தன், விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் ஆகியோர் நூலறிமுகவுரையாற்றினார். திருமதி ஜெயபாரதி கெளசிகன் பாரதி பாடல்கள் பாடினார். க.நவம் ஏற்புரையையும் திருமதி தேவகி ராமேஸ்வரன் நன்றி உரையையும் வழங்கினர்.