கடலட்டை பிடித்த 14 மீனவர்கள் சிக்கினர்

268 0

சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த 14 மீனவர்கள் நாச்சிக்குடா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், இதன்போது 302 கடலட்டைகள் மற்றும் வேறு சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி மீனவ பரிசோதனை அலுவலகத்தில் ஒப்படைப்பட்டுள்ளதாக, கடற்படை குறிப்பிட்டுள்ளது.