ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தராதது வேதனை: அன்புமணி கருத்து

143 0

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம்தாழ்த்துவது வேதனை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார்.

சுங்குவார்சத்திரத்தில் நேற்று நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆன்-லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும். ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த நான்கைந்து ஆண்டுகளில், 85 பேருக்கும் மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் பயன்பாடில்லாத அரசுக்கு சொந்தமான 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் அமைக்கஅரசு ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் போதை பொருள் விற்பனை போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை அதிகாரிகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார். இதேபோல் செங்கல்பட்டில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்திலும் அன்புமணி பேசினார்.