கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் மறுநாள் (03) மாலை 01.00 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 11,12,13,14,15 ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகமே தடைப்படும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அம்பத்தல நீர்விநியோக கட்டமைப்பின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காகவே நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.