வவுனியாவில் இரண்டு மாதங்களில் 96 டெங்கு தொற்றாளர்கள்

299 0

வவுனியாவில் கடந்த இரண்டு மாதங்களில் 96 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மேற்பார்வை சுகாதாரப் பொதுப்பரிசோதகர் கணபதிப்பிள்ளை மேஜெயா இதனை தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு தை மாதம் முதல் மாசி மாதம் 21ஆம் திகதி வரை 96 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுள்ளனர்.

வவுனியா சகாதார வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் பகுதி மேற்கொண்ட விசேட நடவடிக்கை காரணமாக கடந்த வாரம் 11 பேரும் இந்த வாரம் 24 பேருக்கும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய பரிசோதகர் குறிப்பிட்டார்.

அரச திணைக்களங்கள், விடுதிகள், தனியார் விடுதிகள் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் அவர் கோண்டுகோள் விடுத்துள்ளார்.