நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்பார்ப்பல்ல – எஸ்.பி திஸாநாயக்க

253 0

உத்தேச புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்பார்ப்பல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை முழுமையாக நீக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

ஜனாநாயகத்தை முழுமையாக பாதுகாக்கும் பொருட்டான அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் ஒன்று குறித்தே ஜனாதிபதி தமது தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதனை முன்னேடுக்கவே நாங்கள் கவனம் செலுத்துகின்றோம்.

அத்துடன், நாட்டின் இறைமைக்கு பாதகம் ஏற்படும் வகையிலோ, சமஸ்டி முறைக்கோ ஒருபோதும் புதிய அரசியல் அமைப்பில் இடமில்லை.

அதுபோல் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் நிலைக்கும் நாங்கள் புதிய அரசியல் யாப்பு சீர்த்திருத்தை உருவாக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க குறிப்பிட்டார்.