கொள்ளுப்பிட்டியில் சீன விருந்தகம் ஒன்றில் உணவு தயாரிப்பிற்காக தயார் செய்யப்பட்டிருந்த உயிருள்ள ஒரு தொகை பெரிய இறால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்றொலில் மற்றும் நீரியல் வள துறை அபிவிருத்தி அமைச்சின் விசாரணை பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதன்போது ஒருதொகை கடலட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த விருந்தகத்தை நடத்தி வரும் சீனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பெரிய இறால் இனப்பெருக்க காலமான பெப்ரவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களில் பெரிய இறால்களை பிடித்தல், தம்சம் வைத்திருந்தல், கொண்டுச் செல்லல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியன மீன்பிடி மற்றும் நீரியல் வள சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.