நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்தது

247 0

கையூட்டல் ஆணைக்குழுவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உரிய முறையில் அறிவிக்கப்பட்டிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பல தடவைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாக இல்லை.

இதன்மூலம் அவர் அந்த ஆணைக்குழுவை அவமதித்தார் என தெரிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

பின்னர் நாமல் ராஜபக்ஸ ஆணைக்குழுவில் முன்னிலையானதன் காரணமாக வழக்கை நிறைவுக்கு கொண்டுவர பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழு இன்று தீர்மானித்தது.