இரண்டு கொலைகளுக்கு உதவிய நால்வரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கணேமுல்ல மற்றும் ராகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் வெலிப்பில்லேவ, கணேமுல்ல பிரதேசத்தில் வாடகை அறையொன்றில் தங்கியிருந்த போது ஹெரோயின் மற்றும் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு மற்றொரு சந்தேக நபரின் வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வேன் ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பங்களாவத்தை, கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர்.
ஹெரோயின் போதைப்பொருளுடன் அல்விட்டிவெல ராகம பிரதேசத்தில் வைத்து ஏனைய மூவரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 05 கிராம் 580 மில்லி கிராம் ஹெரோயின், கையடக்கத் தொலைபேசி, இலத்திரனியல் தராசு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த மூவரும் ராகம பிரதேசத்தை சேர்ந்த 23, 24 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.