பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல்: மூவர் பலி, 23 பேர் காயம்

187 0

பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

பலோசிஸ்தான் மாகாணததின் குவேட்ட நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்து.

போலியோ தடுப்பூசி செலுத்தும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக செல்லவிருந்த பொலிஸ் குழுவொன்றை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர்   ஒருவரும் அடங்கியுள்ளனர் என பொலிஸ் அதிகாகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் என அறியப்படும் தெஹ்ரீக் -ஈ-தலீபான் பாகிஸ்தான் உரிமை கோரியுள்ளது. இது ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பிலிருந்து வேறுபட்டு இயங்கும் அமைப்பாகும்.