கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 56 ஆவது சபை அமர்வும் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் இடம்பெற்ற இவ் வரவு செலவு திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
18 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 15 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும், அதில் ஒரு உறுப்பினர் சபைக்கு சமூகமளிக்காத போதும் எழுத்து மூலமும், தொலைபேசி ஊடாகவும் ஆதரவு வழங்கியதாக தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
அத்துடன், இரண்டு உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்துள்ளதுடன், மற்றுமொரு உறுப்பினர் அமர்வில் கலந்து கொள்ளவில்லை என்றும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.