ஓமானுக்கு பெண்களை கடத்தல் : கைதான முன்னாள் அதிகாரியின் வங்கிக் கணக்குகள், தொலைபேசி பதிவுகள் ஆராய்வு!

149 0

ஓமான் நாட்டுக்கு பெண்களைக் கடத்திய நடவடிக்கைளில் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர்களை கண்டுபிடிக்கும் இரகசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதான பணி இடைநீக்கம் செய்யப்பட்ட  ஓமான் தூதரகத்தின் மூன்றாவது செயலாளரின் தொலைபேசி பதிவுகள் மற்றும் வங்கி கணக்கு பதிவுகள் ஊடாகவும் இந்த வலையமைப்பு தொடர்பான தகவல்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களுக்கு சட்ட உதவிகளை பெற்றுக் கொடுக்கவும் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ள  முகவர்கள் பணம்  செலவிட தயாராகி வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக்  மனித கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தி  முக்கிய சந்தேக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.